அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்துள்ளது.
அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு எந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை ஆராய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அத்துடன் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறும் உச்சநீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற வழக்குகள் எதுவும் அண்மையில் நேரலை செய்யப்படாத நிலையில், அயோத்தி வழக்கை நேரலை செய்ய சம்மதம் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய ஓய்வுப்பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், ‘அயோத்தி வழக்கை நேரலை செய்வதில் எந்த தவறும் இல்லை. தனிப்பட்ட நபர்களின் பிரச்னை தொடர்பான வழக்குகளை தான் நேரலை செய்வது தவறு. பொது வழக்குகளை, பொது விவகாரங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நேரலை செய்வதில் பிரச்னை இல்லை” என்று கூறினார்.