எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
லோக் பிரஹாரி என்ற தொண்டு நிறுவனம் தொடர்ந்த பொதுநல மனுவின் மீது இந்தக் கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியல்வாதிகள் எம்பி, எம்எல்ஏ ஆன பின் அவர்களின் சொத்துகள் பெரிய அளவில் அதிகரிக்கும் நிலையில் அது குறித்து விசாரிக்க நிரந்தர நடைமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென அந்த அமைப்பு தன் மனுவில் கூறியிருந்தது.