பெண்களுக்கு உதவும் வகையில் எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
மாதவிடாய் காலங்களில் கட்டாய விடுப்பு வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “பெண்களுக்கு மாதவிவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயமானால் அவர்களுக்கு வேலை வழங்க தொழில் நிறுவனங்கள் தயங்கலாம். இந்த விதியே அவர்களுக்கு பாதகமாகி விடும்.
இது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் என்பதால் இதில் தாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவே, மனுதாரர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தை நாடி இது தொடர்பான கோரிக்கைகளை முன் வைக்கலாம்.” என்று கூறினர்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.