அடுத்த வாரம் பூமியை நெருங்கும் பிங்க் நிலவு..! - இந்தியர்களால் பார்க்க முடியுமா?

அடுத்த வாரம் பூமியை நெருங்கும் பிங்க் நிலவு..! - இந்தியர்களால் பார்க்க முடியுமா?
அடுத்த வாரம் பூமியை நெருங்கும் பிங்க் நிலவு..! - இந்தியர்களால் பார்க்க முடியுமா?
Published on

அடுத்த வாரத்தில் பிங்க் நிலவு, சூப்பர் நிலவும் என பல பெயர்களில் அழைக்கப்படும் சிறப்பு நிலவு தோன்றவுள்ளது.

வானில் ஏதேனும் புதிதாத மாற்றம் தோன்றினால் அதனை உடனே ரசிப்பது மக்களின் வழக்கம். குறிப்பாக சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என எது தோன்றினாலும் அதை உரிய உபகரணங்களைக் கொண்டு ரசித்து விடுவார்கள். இதேபோன்று அவ்வப்போது வரும் பிங்க் நிலவு, பெரிய நிலவு ஆகியவற்றையும் ரசிப்பார்கள்.

இந்நிலையில் வரும் 8ஆம் தேதி வானில் பிங்க் நிலவு, முட்டை நிலவு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் சிறப்பு நிலவு தோன்றவுள்ளது. ஆனால் இந்த நிலவு தோன்று நேரம் இந்தியாவில் காலை 8.05 மணி என்பதால் இந்தியர்களால் இதைக்காண முடியாது. இருப்பினும் தொலைக்காட்சிகளில் நேரலையாக காணலாம். நிலவு வரும்போது இரவு இருக்கும் நாடுகள் அனைத்தும் இதனை காணும்.

இந்த நிகழ்வின் போது, நிலவு புவிக்கு அருகாமையில் வரும். எனவே வெளிச்சமாகவும், அளவில் பெரியதாகும் தெரியும். வழக்கமாக நிலவு புவியிலிருந்து 3,84,400 கி.மீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால் இந்த நிகழ்வின் போதும், 3,56,907 கி.மீட்டர் வரை நெருங்கி வரவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com