ஜே.இ தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்: பீகாரில் பரபரப்பு!

ஜே.இ தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்: பீகாரில் பரபரப்பு!
ஜே.இ தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்: பீகாரில் பரபரப்பு!
Published on

இளநிலை பொறியாளர் (junior engineer) பணியிடத்துக்கான முதல் கட்டத் தேர்வில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் 98.5 சதவீத மதிப்பெண் களுடன் முதலிடத்தில் இருப்பதாக வெளியான பட்டியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநில பொது சுகாதாரப் பொறியியல் துறையில் (PHED) இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. 214 பணியிடங்களுக்கு, 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் அடிப்படையில் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 642 பேர் இறுதி செய்யப்பட்டனர். இதற்கான தகுதிப் பட்டிய ல் அந்த துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் நடிகை சன்னி லியோன் பெயர் முதலி டத்தில் இடம்பெற்றுள்ளது. அவர் பற்றிய விவரங்களில், 'வயது 27, 5 வருட அனுபவம் உள்ளவர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இணை செயலாளர் அசோக் குமார் கூறும்போது, ‘’ சன்னி லியோனின் பெயரில் விண்ணப்பம் வந்துள்ளது. டிப்ளமோ இன்ஜினீரியங்கில் அவர் 98.5 மதிப்பெண் பெற்றிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விண்ணப்பம் நிஜமானதா, இல்லை சன் னிலியோன் பெயரில் போலியாக யாரும் அனுப்பியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும்போதுதான், இதை உறுதிப்படுத்த முடியும்.

தவறுகளை திருத்திக் கொள்ளவும், தகவல்களை சரிபார்க்கவும் விண்ணப்பித் தவர்களுக்கு வரும் 24 ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள் ளது’’ என்றார்.  இன்னொரு விண்ணப்ப்பதாரரின் பெயர் BVCXZBNNB என்று இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பீகாரில் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. 

மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ‘’இந்த அரசு போலியான இடத்தை உருவாக்கி, போலியானவர்களுக்கு வேலை வழங்குகிறது’’ என்று குற்றஞ்சாட்டியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com