இந்தியாவில் உருவாக்கப்பட்ட பீரங்கி வெற்றிகரமாக சோதனை!

இந்தியாவில் உருவாக்கப்பட்ட பீரங்கி வெற்றிகரமாக சோதனை!
இந்தியாவில் உருவாக்கப்பட்ட பீரங்கி வெற்றிகரமாக சோதனை!
Published on

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ATAGS howitser வகை பீரங்கிகளை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக ராணுவ தளவாட ஆய்வு நிறுவனமான டி.ஆர். டி. ஓ தெரிவித்துள்ளது.

இந்த பீரங்கி பொக்ரானில் உள்ள சோதனை மைதானத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தை நவீனமாக்கும் முயற்சியின் ஒருபகுதியாகவும், இந்தியாவிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு என்ற இலகை அடையும் நோக்கிலும் இந்த பீரங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பீரங்கிகளை பாரத் ஃபோர்ஜ் மற்றும் டாடா அட்வான்ஸ்ட் ஸிஸ்டம்ஸ் என்ற நிறுவனங்கள் தயாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு படைகளின் வலிமையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு ரக ஏவுகணைகளை டிஆர்டிஓ (DRDO) தயாரித்து வருகிறது. இதில் ஒன்றான ஹெலினா ஏவுகணை லடாக்கில் பனிமலை பகுதிகளில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ சில வாரங்களுக்கு முன்னர்தாம் தெரிவித்திருந்தது. இப்படியான சூழலில் தற்போது மற்றுமொரு பீரங்கியும் சோதிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com