98 எம்எல்ஏ, 7 எம்பிக்கள் சொத்து அதிகம்: வருமான வரித்துறை

98 எம்எல்ஏ, 7 எம்பிக்கள் சொத்து அதிகம்: வருமான வரித்துறை
98 எம்எல்ஏ, 7 எம்பிக்கள் சொத்து அதிகம்: வருமான வரித்துறை
Published on

தேர்தலில் போட்டியிடும்போது வேட்பு மனுவில் கூறியதைவிட 7 மக்களவை எம்பிக்கள், 98 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. 

லோக் பிரகாரி என்ற தன்னார்வ அமைப்பு, அரசியல்வாதிகள் வேட்புமனுவில் குறிப்பிடும் சொத்துக்கள் சரியாக இல்லை என்றும் 257 எம்எல்ஏக்கள், 26 மக்களவை எம்பிக்கள், 11 மாநிலங்களவை எம்பிக்களின் சொத்துக்கள் அதிகம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதுகுறித்து நீதிமன்ற உத்தரவுப்படி வருமான வரித் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வேட்புமனுவில் குறிப்பிடப்படும் வருவாய் மற்றும் சொத்து விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்ததில் 98 எம்எல்ஏக்கள், 7 மக்களவை எம்பிக்களின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்ததாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த எம்பிக்கள், எம்எல்ஏக்களின் சொத்து விவரத்தை தெரிவிக்க சட்டத்தில் வழியில்லை என்றும், எனவே, மூடி முத்திரையிட்ட உரையில் நீதிமன்றத்தில் அளிப்பதாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com