’4 நாட்களுக்கு புத்தக பை வேண்டாம்’ - மாணவர்களின் சுமையைக் குறைக்க கேரள அரசு புதிய முயற்சி!

பள்ளிக் குழந்தைகளின் புத்தக பைகளுக்கு தீர்வு காண கேரள அரசு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகள்
பள்ளிக் குழந்தைகள்எக்ஸ் தளம்
Published on

இன்று பள்ளி செல்லும் சிறு குழந்தைகளே மிகப்பெரிய புத்தக மூட்டையை தோளில் சுமந்துகொண்டு செல்லும் காட்சிகள் பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. பிஞ்சுகளின் இடுப்பு எலும்பைச் சிறுவயதிலேயே முறிக்கும் இந்தப் புத்தக மூட்டைக்கு, எப்போது தீர்வு காணப்படும் என்பதுதான் பல பேருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில், இதற்கு தீர்வு காண கேரள அரசு முனைந்துள்ளது.

இது குறித்து அம்மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி, “புத்தக பை தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆலோசகர்களிடமிருந்து பல புகார்கள் மற்றும் ஆலோசனைகள் கேரளா கல்வித்துறைக்கு குவிந்து வருகின்றன. சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் மாநிலத்தில் பாடப்புத்தகங்கள் ஏற்கெனவே இரண்டு பகுதிகளாக குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை படைத்த ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர்!

பள்ளிக் குழந்தைகள்
மாணவர்கள் புத்தக பைகளுக்கு கட்டுப்பாடு - தெலங்கானா அரசு அதிரடி

இந்த நிலையில், கேரளாவில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தக பைகள் எடை அதிகமாக இருப்பது குறித்து அரசாங்கம் விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது.

1-ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்களின் பள்ளிப் பைகளின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களின் பள்ளிப் பைகளின் எடை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரையிலும் பராமரிக்க வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும்.

இது தவிர, மாதத்திற்கு குறைந்தது 4 நாட்களுக்கு அரசுப் பள்ளிகளில் புத்தக பை இல்லாத நாட்களாக கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் மாணவர்கள் புத்தகங்கள் இன்றி பள்ளிக்கு வரலாம். இந்த திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இது, கேரள குழந்தைகளிடமும், பெற்றோர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, தெலங்கானாவில் துவக்கப் பள்ளி மாணவர்கள் 6 முதல் 12 கிலோ வரையிலும், மற்ற வகுப்பு மாணவர்கள் 17 கிலோ வரையிலும் புத்தக சுமையைத் தூக்கிச் செல்வதாகப் பரவலாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அம்மாநில அரசு கடந்த 2017ஆம் ஆண்டு மாணவர்கள் புத்தகம் கொண்டு செல்வதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: லீவு எடுத்துக்கோங்க..’ கம்பெனி CEO சொன்னபோதும் மறுப்பு தெரிவித்த இந்தியர்! வைரலாகும் பதிவு!

பள்ளிக் குழந்தைகள்
பள்ளி மாணவர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வித்தியாச முயற்சி.. உற்சாகமடையும் மாணவர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com