ஒத்திவைக்கப்பட்ட 2 முக்கிய தேர்வுகள்.. தேசிய தேர்வு முகமை தலைவர் பதவிநீக்கம்! தவிக்கும் மாணவர்கள்!

ஒத்திவைக்கப்பட்ட இரண்டு முக்கிய தேர்வுகள், நீட் குளறுபடி என எந்தபக்கம் சென்றாலும் தடை... இதனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் மாணவர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு
நீட் தேர்வுட்விட்டர்
Published on

இரண்டு முக்கிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள், ஒரு தேர்வு ரத்து, மற்றும் இன்னொரு தேர்வின் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை, நீடிக்கும் குளறுபடிகளால் தலைமை அதிகாரி பதவி நீக்கம் மற்றும் மத்திய அரசு சீர்திருத்தத்துக்காக அமைத்துள்ள குழு என தேசிய தேர்வு முகமை இடியாப்ப சிக்கலில் மூழ்கியுள்ளது.

மிகவும் முக்கியமாக நீட் முதுகலை தேர்வு மற்றும் விஞ்ஞான & தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுக்கான நெட் தேர்வு இரண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கான நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமை குளறுபடிகளில் இருந்து மீள முடியாமல் தத்தளிக்கிறது.

நீட் தேர்வு
இப்படி ஒரு விதியா? ’ஹிட் விக்கெட் + ரன்அவுட்’ 2 முறை அவுட்டாகியும் NOTOUT கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்!

தேசிய தேர்வு முகமை தலைவர் பதவிநீக்கம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நீட் தேர்வும் தற்போது சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ளதால், அந்தத் தேர்வும் ரத்து செய்யப்படலாம் என மாணவர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் தொடரும் புகார்கள் மூலமாக நிலைமையை உணர்ந்து கொண்ட மத்திய அரசு, தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் சிங்கை பதவியில் இருந்து நீக்கி உள்ளது. முன்னாள் இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு நபர்கள் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து, தேசிய தேர்வு முகமை செயல்பாடுகளை மேம்படுத்த பரிந்துரைகள் அளிக்குமாறு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுபோத் குமார் சிங்
சுபோத் குமார் சிங்

இரண்டு மாதங்களிலே இந்த உயர்மட்ட குழுவின் அறிக்கை கிட்டியவுடன், தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்தும் விதத்தில் பல்வேறு மாறுதல்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தற்போது தற்காலிக தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐடிபிஓ சேர்மன் பிரதீப் சிங் கரோலா இடத்தில் முழு நேர தலைமை அதிகாரியை நியமிக்க வேண்டிய பணியும் நிலுவையில் உள்ளது.

இத்தகைய குழப்பமான சூழலில் தேசிய தேர்வு முகமை முதுகலை நீட் தேர்வை எப்போது நடத்தும் என்பதும், விஞ்ஞான மற்றும் தொழில்துறை கவுன்சிலுக்கான நெட் தேர்வு எப்போது நடக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற UGC-நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்துள்ளதாக சைபர் கிரைம் தகவல் அளித்துள்ளதால், இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையில், மறுதேர்வு எப்போது நடைபெறும் என்பது தெரிவிக்கப்படவில்லை. இப்படி தேசிய தேர்வு முகமையும் அதன் நடவடிக்கைகள் மாணவர்களுக்கு மனஉளைச்சலை அளிக்கும் விதமாகவே உள்ளதால், நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன.

நீட் தேர்வு
‘உறவெல்லாம் ஒன்றாக..விழியெல்லாம் தேனாக’ விஜய்-பவதாரணி குரலில் மனதை வருடும் சின்ன சின்ன கண்கள் பாடல்!

நீட் தேர்வு முறைகேடுகளால் கூடுதல் சிக்கல்!

இந்நிலையில்தான் நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரம் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஏற்கனவே பீகார் காவல்துறை மற்றும் குஜராத் காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆகவே நீட் தேர்வு ரத்து செய்யப்படுமோ என்கிற குழப்பமும் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. ஏற்கனவே 2018, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் நீட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு - உச்சநீதிமன்றம்
நீட் தேர்வு - உச்சநீதிமன்றம்புதிய தலைமுறை

இது ஒருபுறம் இருக்க, உச்ச நீதிமன்றத்தில், நீட் குளறுபடிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மே 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போது, தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. மிகவும் கடினமானதாக கருதப்படும் இந்த தேர்வில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதாக நீட் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் 1563 மாணவர்களுக்கு 'கிரேஸ் மார்க்ஸ்’ வழங்கப்பட்டது தெரியவந்தது. தேசிய தேர்வு முகமையின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தில் அம்பலமான நிலையில், சர்ச்சைக்குரிய "கிரேஸ்" மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. நேரம் விரயமானதற்காக அளிக்கப்பட்ட இந்த இழப்பீடு மதிப்பெண்கள் இல்லாமல் மாணவர்கள் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு முயற்சி செய்யலாம் எனவும், இல்லாவிட்டால் அவர்கள் மறு தேர்வில் கலந்து கொள்ளலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

அதன்படி இன்று 1563 மாணவர்களுக்கு மறுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதனால் குளறுபடிகளுக்கு பதில் கிடைக்காது எனவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் நிலுவையில் உள்ளன எனவும் குறிப்பிடும் மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர உறுதிப்பூண்டு உள்ளனர்.

நீட் தேர்வு
0 தோல்வி.. வரிசையாக 6 வெற்றி! இருப்பினும் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் SA! வில்லனாக மாறிய WI!

அறிமுகப்படுத்தப்படும் புதிய தண்டனை சட்டம்!

அரசியல் ரீதியாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்திலும் குரல் கொடுக்க திட்டமிட்டுள்ளன. முறைகேடுகளுக்கு பாரதிய ஜனதா கட்சி அரசு பதில் சொல்ல வேண்டும் எனவும் மாணவர்களுக்கு நேர்ந்துள்ள மன உளைச்சலுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்து வருகின்றன.

நீட் தேர்வு முறைக்கேடு
நீட் தேர்வு முறைக்கேடுமுகநூல்

இந்நிலையில் பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுபவரை கடுமையாக தண்டிப்பதற்கான புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் ஆள் மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகாவது மாணவர்களின் மனஉளைச்சல்களுக்கு முடிவு கட்டப்படுமா என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

நீட் தேர்வு
அந்த எமோசன்.. அந்த வெறி! 2023 ODI WC-ல் ஏற்பட்ட வலி! 2024-ல் ஆஸியை பழிதீர்த்து ஆப்கானிஸ்தான் வரலாறு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com