கேரளாவில் ஸ்டிரைக்: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளாவில் ஸ்டிரைக்: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கேரளாவில் ஸ்டிரைக்: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் தனியார் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை.

கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தனியார் வாகனங்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்திற்கு கேரள அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கேரளாவில் 90 சதவிகித அரசுப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனால், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் எல்லையிலேயே நிறுத்தப்படுகின்றன. களியக்காவிளை, குமுளி எல்லைகளிலேயே தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.‌ பாரதிய மஸ்தூர் சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், எல்லையிலிருந்து கேரளாவிற்குச் செல்ல வாகனங்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர். கேரளாவில் தனியார் பேருந்துகள், வாடகை ஆட்டோ‌, கார்களும் இயங்கவில்லை.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com