ட்டத்திற்குப் புறம்பான முறையில் மருத்துவ ஆக்சிஜனை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவில், ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைப்பதும் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் கேரள தலைமைச் செயலாளர் வி.பி.ஜோய், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து, அதற்கு பற்றாக்குறை ஏற்படும்போது கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பது தடை செய்யப்பட்ட செயலாகும் என்று கூறியிருக்கிறார். ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்குவோர் மீது பேரழிவு மேலாண்மைச் சட்டம் மற்றும் கேரள பெருந்தொற்று நோய்கள் அவசரச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வி.பி.ஜோய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.