கல்யாண டார்ச்சர்: 18வது மாடியில் இருந்து மிரட்டிய பெண்

கல்யாண டார்ச்சர்: 18வது மாடியில் இருந்து மிரட்டிய பெண்
கல்யாண டார்ச்சர்: 18வது மாடியில் இருந்து மிரட்டிய பெண்
Published on

18வது மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் வழக்கறிஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

மும்பை ஆர்.ஏ.கிட்வாய் மார்க் பகுதியில் 20 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் 18வது மாடியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நின்று கொண்டு நேற்று கீழே குதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதை கவனித்த பெண் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மாடிக்கு சென்ற அவர்கள், விளிம்பில் நின்று கொண்டிருந்த பெண்ணை கீழே இறங்கும்படி கூறினார்கள். ஆனால், யாரும் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம். அருகில் வந்தால் குதித்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பெண் இன்ஸ்பெக்டர் சாலினி சர்மா, அவர் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி மீட்டார். பின்னர் 5 மணி நேரமாக நீடித்த இந்த போராட்டம் முடிக்கு வந்தது. விசாரணையில் அவர் வழக்கறிஞர் என்பது தெரியவந்தது.

இதுபற்றி துணை போலீஸ் கமி‌ஷனர் கூறும்போது, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற குடும்பத்தினரின் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com