“ட்வீட் செய்யாதீங்க, டொனேட் செய்யுங்க” - அசாம் குறித்து அக்‌ஷய் ஆதங்கம்

“ட்வீட் செய்யாதீங்க, டொனேட் செய்யுங்க” - அசாம் குறித்து அக்‌ஷய் ஆதங்கம்
“ட்வீட் செய்யாதீங்க, டொனேட் செய்யுங்க” - அசாம் குறித்து அக்‌ஷய் ஆதங்கம்
Published on

அசாம் வெள்ளம் குறித்து ட்வீட் செய்யாதீங்க முடிந்த உதவியை செய்யுங்கள் என நடிகர் அக்‌ஷய் குமார் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். 

அசாம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கடும் மழைப்பொழிவு காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது. 31 மாவட்டங்களில் உள்ள 4,620 கிராங்களில் வசிக்கும் 46 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அசாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், “நீங்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ட்விட்டரில் சோகம் என்று மட்டும் பதிவு செய்கிறீர்கள். இதுபோன்று ட்வீட்டுகளை போட வேண்டாம் என நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு பதிலாக உதவி செய்யுங்கள். ஒரு ரூபாயோ, ரூ.25 லட்சமோ அல்லது ரூ.25 கோடியோ உங்களால் என்ன முடியுமோ அதைக் கொடுங்கள். உங்களால் முடிந்த நிதியை கொடுத்துவிட்டு, ட்வீட் செய்வதை நிறுத்தங்கள். இப்படி ட்வீட் மட்டும் செய்வது வருத்தமளிக்கிறது. கடவுள் அருள் புரியட்டும். அனைவரும் நலமுடன் இருப்பார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com