“ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்துங்கள்” - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

“ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்துங்கள்” - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
“ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்துங்கள்” - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
Published on

ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டுமென அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

ராஜஸ்தான் மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜான்சன் & ஜான்சன்’ஸ் ஷாம்புகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில் சமீபத்தில் சோதனை நடத்தினர். ஃபார்மால்டிஹைடு எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் இந்த ஷாம்புவில் இருப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து அந்த சோதனை நடத்தப்பட்டது. சில ஜான்சன் & ஜான்சன்’ஸ் ஷாம்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை தர ஆய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த மார்ச் 5ம் தேதி ராஜஸ்தான் மருந்து தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தனர். அதில், தர நிர்ணய ஆய்வில் தோல்வி அடைந்த பொருட்கள் சிலவற்றின் பட்டியலை வெளியிட்டு இருந்தனர். அதில், ஜான்சன் & ஜான்சன்’ஸ் பேபி ஷாம்பு பொருட்கள் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்ட சோதனைகளில் தோல்வி அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டுமென அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. பேபி ஷாம்புவில் அஸ்பெஸ்டாஸ் உள்ளிட்டவை கலந்திருப்பது சோதனையில் தெரிந்ததால் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தல் தொடர்பாக தங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய மருந்து ஆய்வகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர்தான் முடிவுக்கு வர முடியும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com