ஆந்திராவில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ள வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்திற்கு புதிதாக வந்தே பாரத் ரயில் சேவை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 19-ம் தேதி பொதுமக்கள் பயணிக்கும் வகையில் இந்த ரயில் சேவை துவங்குகிறது. வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைப்பதற்கும், மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் பிரதமர் மோடி ஐதராபாத் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், இதற்கான ஒத்திகையில் வந்தே பாரத் ரயில் இன்று ஈடுபட்டு வந்த நிலையில், விசாகப்பட்டினம் ககாஞ்சரப்பாலம் அருகே ரயில் வந்த போது, மர்ம நபர்கள் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமானது. இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ள வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Andhra Pradesh | Stones pelted on Vande Bharat train in Visakhapatnam which will be flagged off by PM Modi on Jan 19. Incident occurred during maintenance.

Glass pane of a coach of Vande Bharat express was damaged near Kancharapalem, Visakhapatnam. Further probe underway: DRM pic.twitter.com/JQLrHbwyJ4
— ANI (@ANI) January 11, 2023