நாட்டின் ஒவ்வொரு ஏழைக்கும் உறுதியான, வலிமையான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து வீடுகளும் நவீன வசதிகளைக் கொண்டதாகவும், மகளிர் அதிகாரமளித்தலின் சின்னமாகவும் திகழ்கின்றன எனவும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உறுதியான வீடு வழங்கும் நமது லட்சியத்தின் முக்கியமான கட்டத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம். மக்களின் பங்களிப்பால் மட்டுமே மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்ட முடிந்துள்ளது. இந்த வீடுகள் அடிப்படை வசதிகளை கொண்டுள்ளதுடன் இன்று மகளிர் அதிகாரமளித்தலுக்கு காரணமாக விளங்குகின்றன. இது அடையாளச் சின்னமாக மாறியுள்ளது” என தெரிவித்துள்ளார்