உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி - ஸ்டீல் விலை கடும் உயர்வு

உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி - ஸ்டீல் விலை கடும் உயர்வு
உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி - ஸ்டீல் விலை கடும் உயர்வு
Published on

ரஷ்யா - உக்ரைன் போர் எதிரொலியாக, ஸ்டீல் (எஃகு) விலை டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான போர் தீவிரமடைந்தால், இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று தொழில்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

ஸ்டீல் உருவாக்கத்திற்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான நிலக்கரியில், 85 சதவிகிதம் இறக்குமதியை இந்தியா நம்பியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதானமாகவும், தென் ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து நிலக்கரியை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன.

இந்நிலையில், உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக, வர்த்தகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் நிலக்கரி டன்னுக்கு 500 அமெரிக்க டாலர்களாக விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் சுருள்கம்பிகள் மற்றும் டிஎம்டி கம்பிகள் விலையில் 20 சதவீதம் அதிகரித்து டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, சுருள்கம்பிகள் டன்னுக்கு 66 ஆயிரம் ரூபாய்க்கும், டிஎம்டி கம்பிகள் டன்னுக்கு 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. ஸ்டீல்கள் வாகன உற்பத்தி, வீட்டு உபயோகப்பொருட்கள் உற்பத்தி மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஸ்டீல் பயன்படுத்தப்படுவதால், வீடுகள், வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் விலையும் உயரும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com