2021ஆம் ஆண்டு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாநிலங்கள்: முன்னணியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா!

2021ஆம் ஆண்டு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாநிலங்கள்: முன்னணியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா!
2021ஆம் ஆண்டு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாநிலங்கள்: முன்னணியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா!
Published on

2021 ஆம் ஆண்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன.

இது தொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 1.26 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழ்நாட்டிற்கு 1.23 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருப்பதாகவும் இந்தியாவிலேயே அதிக அளவில் வெளிநாடு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த மாநிலங்களில் முதல் இரண்டு இடங்களை இந்த மாநிலங்கள் பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தமிழகத்தின் உள்ள மாமல்லபுரம் சுற்றுலா தளம் அதிக அளவில் வெளிநாட்டு பயணிகளை ஈர்த்த இடமாக பட்டியலில் இடம்பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆக்ராவின் தாஜ்மஹாலும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுற்றுலா துறையில் சிறப்புடன் செயல்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் மாநிலங்களிலும் தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் இரு இடங்களைப் பிடித்து முன்னணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நடைபெற்ற அரசு விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் இந்த புள்ளி விவரங்களை வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com