போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. சாலை விதிகளை மீறுவோர் மீது தற்போது போலீசார் புதிய விதிகளின் படியே அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். லட்சக்கணக்கில் அபராதம் செலுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன
இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், அபராதம் விதிப்பது விபத்தைக் குறைப்பதற்காகத்தான் என்றும், அரசின் வருவாயை பெருக்குவதற்காக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.