இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, சிறப்பு விமானத்தில் நேற்று மாலை 3.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.45 மணிக்கு திருப்பதி சென்றார். திருப்பதியில் இருந்து கார் மூலம் திருமலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்கிய பிரதமர் ரணில் விக்ரசிங்கே, இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் அவரது மனைவி மைதிலி விக்ரமசிங்கே உடன் பங்கேற்றதுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனும் செய்தார்.
பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் உள்ள துலாபாரத்தில் தனது உடல் எடைக்கு இணையாக இலங்கை ரூபாய் மதிப்பில் 16 ஆயிரத்து 160 ரூபாயை காணிக்கையாக இலங்கை பிரதமர் உண்டியலில் செலுத்தினார்.