”என்உயிருக்கு ஆபத்துனா அதிபர்தான் காரணம்”-இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிநீக்கமும் பின்னணியும்

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கே, ரோஷன் ரணசிங்கா
ரணில் விக்கிரமசிங்கே, ரோஷன் ரணசிங்காபுதிய தலைமுறை
Published on

நடப்பு உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இலங்கை அணி 9 போட்டிகளில் பங்குபெற்று 2இல் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. இதையடுத்து, அந்த அணியின் அடுத்தசுற்று வாய்ப்பு பறிபோனது. இதனால் அவ்வணி மீது அதிக விமர்சனம் எழுந்தது. மேலும், அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரோஷன் ரணசிங்கா முழு இலங்கை கிரிக்கெட் (SLC) வாரியத்தையும் இடைநீக்கம் செய்ததாகச் செய்தி வெளியானது.

இலங்கை கிரிக்கெட் வாரியம்
இலங்கை கிரிக்கெட் வாரியம் முகநூல்

இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மாற்றியமைக்கும் விளையாட்டு அமைச்சரின் நடவடிக்கைக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விளையாட்டு அமைச்சரின் முடிவையும் அவர் கண்டித்ததாகத் தெரிகிறது. “கிரிக்கெட் இடைக்காலக் குழுவை நீக்காவிட்டால், விளையாட்டுத் துறை தனது கீழ் கொண்டுவரப்படும் என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாகவும், இதையடுத்தே அக்குழு நீக்கப்பட்டதாகவும் இலங்கை ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கே, ரோஷன் ரணசிங்கா
அரசு தலையீடு: இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி

இதன்காரணமாக விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் மற்றும் அதிபர் ரணிலுக்கு இடையே மோதல் தொடங்கியிருக்கிறது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, ரோஷனைப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில், அவரது ஆலோசகர் சாகல ரத்நாயக்காவை குறிப்பிட்டுப் பேசிய நிலையில், பதவி நீக்கம் செய்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ரோஷன் ரணசிங்கா, “தனக்கு வாழ்வதற்கான உரிமை வேண்டும். வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம்கோரி ஓடவேண்டிய தேவை தனக்கு இல்லை. ஜனாதிபதி ரணில் தன்னை அரசியல்ரீதியாகப் பழிவாங்குகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஊழல், மோசடிகளை வெளிக்கொணர்ந்த தனக்கு அப்படிச் செய்யலாமா? அரசியல் வரலாற்றில், தான் யாரிடமும் கைநீட்டியது கிடையாது. எந்த தீயச் செயல்களுக்கும் துணை நின்றதும் கிடையாது. தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கதான் பொறுப்புக் கூற வேண்டும்” எனத் தெரிவித்தார். இதையடுத்து, அவரைப் பதவிநீக்கம் செய்து ரணில் விக்கிரமசிங்கே அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: இலங்கை டூ இந்தியா: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

முன்னதாக நேற்று பேட்டியளித்த ரோஷன், ”தற்போதைய கிரிக்கெட் நெருக்கடியின் பின்னணியில் உள்ளவர்கள், இது சம்பந்தமாக அவர்களின் நோக்கினை வெளிப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், அவற்றின் நோக்கம் என்ன, அவர்களின் இலக்கு என்ன, அவற்றின் பின்னணியில் உள்ள ஊழல் கும்பல் யார்?

ரோஷன்
ரோஷன்

இவை அனைத்தையும் நான் அதன்போது தெளிவுபடுத்துவேன். நாளை (இன்று) நாடாளுமன்றத்தில், இதுதொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த உள்ளேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க: உ.பி: சிறுநீர் குடிக்கச் சொல்லி சிறுவனை கட்டாயப்படுத்திய இருவர்? கண் புருவத்தையும் நீக்கி கொடுமை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com