இலங்கையில் வன்முறையாளர்களை சுட்டுத்தள்ள உத்தரவா? விளக்கம் கொடுத்த ராணுவ தளபதி

இலங்கையில் வன்முறையாளர்களை சுட்டுத்தள்ள உத்தரவா? விளக்கம் கொடுத்த ராணுவ தளபதி
இலங்கையில் வன்முறையாளர்களை சுட்டுத்தள்ள உத்தரவா? விளக்கம் கொடுத்த ராணுவ தளபதி
Published on

இலங்கையில் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட முப்படை வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மறுத்துள்ளார்.

இலங்கையில் வன்முறைகள் நீடித்து வரும் நிலையில் அதில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுட்டுத்தள்ள முப்படை வீரர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டுள்ள மக்களை சுட்டுக்கொன்று போராட்டங்களை அடக்க அதிபர் கோட்டாபய முடிவெடுத்து விட்டதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் இலங்கை ராணுவ தளபதி ஷவேந்தர சில்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்கள் தவறு என ஷவேந்திர சில்வா விளக்கம் அளித்துள்ளார். இது போன்ற மோசமான செயல்களில் ராணுவத்தினர் எந்த ஒரு சூழலிலும் ஈடுபடமாட்டார்கள் என ஷவேந்திர சில்வா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி: வன்முறை காடாக மாறிய இலங்கை

முன்னதாக இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. போராட்டக்காரர்கள் மீது வீசியெறியப்படும் கண்ணீர்புகைக்குண்டுகளை சாலை பாதுகாப்பு கூம்புகளை வைத்து செயலிழக்க செய்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com