சனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்

சனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்
சனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்
Published on

கேரளாவில் எலெக்ரீஷியன் சனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கேரளா கொடங்கவிளாவில் எலெக்ட்ரீஷியனாக இருந்து வந்தவர் சனல்குமார். இவர் கடந்த திங்கள் கிழமை நெய்யடின்கார டிஎஸ்பி
ஹரிகுமார் காரின் பின்புறம் தனது இருச்சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். 

இதனால் ஹரிக்குமாரின் கார் வெளியே எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹரிக்குமார் சனல்குமாரை
தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படவே ஹரிக்குமார் சனல்குமாரை
பிடித்து தள்ளியுள்ளார். 

இதில் சாலையில் வந்த காரில் மோதி சனல்குமார் மரணமடைந்தார். இதையடுத்து ஹரிகுமார் அங்கிருந்து தப்பிச் சென்று
தலைமறைவாகியுள்ளார். 

ஹரிகுமாரை கைது செய்யுமாறு அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் பினராயி விஜயன்,
ஹரிகுமார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

இந்நிலையில், சனல்குமாரின் மனைவி விஜி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது கணவர் கொலை
குறித்த விசாரணையில் வேறு ஒரு பொறுப்பான ஐபிஎஸ் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் எனவும் தனது கணவர் இறந்து 5
நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளி இருக்கும் இடத்தை கூட கண்டுபிடிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து காவல் உயரதிகாரி லோக்நாத் பெஹேரா உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. 

மேலும் ஹரிகுமார் மீது ஐபிசி பிரிவு 302-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.    

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com