ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் விளக்கிச் சொல்லுங்கள் என அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
அரசின் திட்டங்களை ஜம்மு காஷ்மீர் மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக, மத்திய அமைச்சர்கள் 36 பேர் இன்று முதல் 23ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, சதானந்த கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அமைச்சர்கள் அனைவரும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் அங்குள்ள நகர் பகுதிகளுக்கு மட்டும் செல்லாமல் கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்திக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.