முஹுரத் டிரேடிங் என்று அழைக்கப்படும் இந்த வர்த்தகத்தின் போது பங்குகளை வாங்கினால் அடுத்த ஆண்டு வரை லாபகரமாக இருக்கும் என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கை. தென் மாநிலங்களில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், சில வட மாநிலங்களில் பஞ்சாங்கப்படி நவம்பர் 1 ஆம் தேதியான இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று மும்பையில் தீபாவளி கொண்டாடப்படுவதால் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டு மாலையில் ஒருமணி நேரம் சிறப்பு வர்த்தகம் நடைபெற உள்ளது.