ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மீதான கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
பீகாரில் கடந்த 1991 முதல் 1995 வரையில் முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது கால்நடை தீவனம் வாங்குவதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. தியோஹர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக லாலு உள்ளிட்ட 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஊழல் வழக்கில் சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததற்காக 2013ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் லாலுவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதேபோல், இந்த வழக்கில் லாலு பிரசாத் மீது மேலும் 3 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இந்த வழக்கில் ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் தீர்ப்பளிக்கவுள்ளார். இதற்காக லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சென்றுள்ளார்.