தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கயிருக்கும் நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் எனவும் இது வரும் மூன்றாம் தேதி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரையை நோக்கி செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இதனிடையே தென்மேற்கு பருவ மழை இன்று தொடங்க உள்ள நிலையில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை, அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் தொடங்கும் என்பதால் மீனவர்கள் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலுக்கு நான்காம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.