டெல்லி வன்முறை: சோனியா காந்தி, ராகுல் கடும் கண்டனம்

டெல்லி வன்முறை: சோனியா காந்தி, ராகுல் கடும் கண்டனம்
டெல்லி வன்முறை: சோனியா காந்தி, ராகுல் கடும் கண்டனம்
Published on

டெல்லி வன்முறை சம்பவத்துக்கு முதலமைச்சர் கெஜ்ரிவால், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதில் நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. குறிப்பாக இந்தக் கலவரத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஷாரூக் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் வன்முறை வெடித்த பகுதிகள் உள்ளிட்ட பத்து இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் கெஜ்ரிவால், வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது என்றும் வன்முறையை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் வன்முறைக்கு இடமில்லை எனக் கூறிய சோனியாகாந்தி, மக்கள் மீது மத ரீதியான மற்றும் பிரிவினை கொள்கையை திணிக்கும் சக்திகளுக்கும் இந்த நாட்டில் எங்கும் இடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி கூறும்போது போராட்டம் நடத்த உரிமை இருந்தாலும், கட்டுப்பாடு காக்கப்பட வேண்டும் என்றும் வன்முறை கண்டனத்துக்குரியது என்றும் அமைதியான ஆர்ப்பாட்டங்களே ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com