கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரின் மகன் மீது ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன். இவரது மகனான பினாய் கொடியேறி மீது மும்பையை சேர்ந்த 33வயது பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில் பினாய் தன்னை ஏமாற்றியதாகதவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் புகாரில் பினாய் 2008ஆம் ஆண்டில் மும்பையில் ஒரு விடுதியில் நடனமாடிய போது அப்பெண்னை சந்தித்தாக தெரிவித்துள்ளார். அதற்குப் பின் அவர் அப்பெண்னை வேலையை விட்டு அவருடன் வரும்படி அழைத்துள்ளார். இதனையடுத்து இருவரும் மும்பையில் வசித்துள்ளனர். அப்போது இவர் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார். அத்துடன் தனக்கு ஏற்கெனவே கேரளாவில் பினாய்க்கு திருமணமாகி குடும்பம் இருப்பதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
எனினும் அப்பெண்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நெருங்கி பழகியுள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் கடந்த 2010ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பினாய் இடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பினாய் இதை ஏற்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அப்பெண் கேரளாவிலுள்ள பினாய் குடும்பத்தை கண்டுபிடித்து அவர் பற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இத்தனை நாட்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தால், அந்தப் பெண்ணை கொலை செய்வேன் என மிரட்டியதால் அப்பெண் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பினாய் கொடியேறி, “இந்தப் பெண் என்னிடம் ஆறு மாதங்களாக 5கோடி ரூபாய் கேட்டு மிரட்டி வந்தார். நான் அப் பணத்தை கொடுக்காததால் என் மீது புகார் அளித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.