'ஓம்', 'பசு' வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு பயம் - பிரதமர் மோடி

'ஓம்', 'பசு' வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு பயம் - பிரதமர் மோடி
'ஓம்', 'பசு' வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு பயம் - பிரதமர் மோடி
Published on

ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகளை கேட்டாலே மின்சார அதிர்ச்சியை போல சிலர் உணர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் கால்நடைகளை கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். ராதே ராதே எனக் கூறி தனது உரையை தொடங்கிய மோடி, ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டில் கிராம மக்களுக்கு அரசே பசுவை இலவசமாக வழங்குவதாகவும், அந்த பசு ஈனும் முதல் பசு கன்றுக்குட்டி, கால்நடை இல்லாத மற்றவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதன்படி அனைவருக்கும் இலவசமாக கால்நடைகள் விநியோகிக்கப்படுவதாக மோடி குறிப்பிட்டார். 

அதேநேரத்தில் இந்தியாவில் ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகளை கேட்டாலே சிலர் பயப்படுவதாகவும், மின்சார அதிர்ச்சியை போல உணர்வதாகவும் தெரிவித்தார். மேலும் ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகள் இந்தியாவை 16ஆம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்லும் என பலர் அஞ்சுவதாகவும் மோடி தெரிவித்தார். இதுபோன்ற விமர்சனங்களை முன்வைப்பவர்கள் எப்பாடுபட்டாவது இந்தியாவை சிறுமைப்படுத்த முயற்சிப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com