“தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழி நடத்தியுள்ளனர்” - உச்சநீதிமன்றம்

“தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழி நடத்தியுள்ளனர்” - உச்சநீதிமன்றம்
“தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழி நடத்தியுள்ளனர்” - உச்சநீதிமன்றம்
Published on

இந்திய தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழி நடத்தியுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருபரங்குன்றம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஏ பாப்டே, அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை 4 வாரக்காலத்திற்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் சார்பில் கோரப்பட்டது. இதற்கு திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி எதிர்ப்பு தெரிவித்து வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பாப்டே, 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த ‌ஏன் ‌அவசரம்? இடைத்தேர்தலை தனியாக நடத்தினால் என்ன பிரச்னை? என வினவினார். மேலும், வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த எங்களுக்கும், பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கும் கால அவகாசம் வேண்டும் என்பதால் அவச‌ரப்படுத்தாதீர்கள் எனவும் நீதி‌பதிகள் தெரிவித்தனர். 

எனினும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தை‌ யாரோ தவறாக வழி நடத்தியிருப்பதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக இரண்டு வாரக்காலத்திற்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம்‌ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com