இதுவரை 80 சதவீதம் வங்கி கணக்குகளும், 60 சதவீதம் மொபைல் எண்ணும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக இந்திய தனி நபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தனி நபர் அடையாள ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “109 கோடி வங்கி கணக்குகளில் 87 கோடி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 58 கோடி கணக்குகள் சரிபார்க்கப்பட்டுள்ளது. அதேபோல், 142 கோடி செல்போன் எண்களில் 85.7 கோடி எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்றார்.
வங்கிகளில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளது. அதேபோல், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் மார்ச் 31ம் தேதி கடைசி நாள் ஆகும்.