புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் 40 முதல் 50 சதவீதம் அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் "புகையிலை பயன்பாட்டால் இந்தியாவில் தினமும் 3 ஆயிரத்து 50 பேர் வீதம் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் இறக்கின்றனர். இதனால் பெரும் சமூக, பொருளாதார சுமையும் ஏற்படுகிறது. புகையிலையால் ஏற்படும் உயிரிழப்புகள், வியாதிகளுடன், நாட்டின் பொருளாதார மேம்பாட்டிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.
மேலும் " புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் 40 முதல் 50 சதவீதம் அதிகமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் வியாதிகள், மரணங்களால் உண்டாகும் பொருளாதார சுமை, ரூ.1.77 லட்சம் கோடி அளவுக்கு மிக அதிகமாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிதம் ஆகும்" என்றார் ஹர்ஷ்வர்தன்.