"புகை பிடிப்பவரா நீங்கள்? உங்களை கொரோனா பின் தொடர்கிறது" எச்சரிக்கும் சுகாதாரத் துறை !

"புகை பிடிப்பவரா நீங்கள்? உங்களை கொரோனா பின் தொடர்கிறது" எச்சரிக்கும் சுகாதாரத் துறை !
"புகை பிடிப்பவரா நீங்கள்? உங்களை கொரோனா பின் தொடர்கிறது" எச்சரிக்கும் சுகாதாரத் துறை !
Published on

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் எளிதில் பரவ வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "புகைப்பழக்கம் உள்ளவர்களின் , கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. புகைப்பிடிக்கும் போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியை தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும்" என தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து, கொரோனா தொற்றுக்கு எதிராக போரிடும் சக்தியை இழந்துவிடும். இதுபோலவே இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கும், கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் புகையிலை பொருள்கள் பயன்படுத்துபவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும்போது அவை மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com