இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் வரிசையில் கோத்ரேஜ் குழுமத்தின் பங்குதாரர் ஸ்மிதா கிரிஸ்னா முதலிடம் வகிக்கிறார்.
கோடக் வெல்த் - ஹுருன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்மிதா கிரிஸ்னாவுக்கு ரூ.37,500 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கோத்ரேஜ் குழுமத்தில் ஸ்மிதா கிரிஸ்னாவுக்கு 20 சதகவிகிதம் பங்கு உள்ளது. இவரைத் தொடர்ந்து ஹெச்.சி.எல் எண்டர்பிரைசஸ் ஐ.டி. நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான ரோஷினி நாடார் இரண்டாமிடம் வகிக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு ரூ.30,000 கோடி ஆகும். பிரபல ஊடக நிறுவனமான டைம்ஸ் க்ரூப்பின் தலைவரான இந்து ஜெயின் ரூ.26 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் மூன்றாவது இடத்திலும், பெங்களூரூவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டுவரும் பையோகான் நிறுவனத்தின் தலைவர் கிரன் மஜும்தார் ஷா ரூ.24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். ஹெச்.சி.எல் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடாரின் மனைவி கிரண் நாடார் ரூ.20 ஆயிரம் கோடி சொத்துகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.