ஜார்க்கண்ட் தேர்தல் கருத்து கணிப்பு: வெற்றி யாருக்கு ?

ஜார்க்கண்ட் தேர்தல் கருத்து கணிப்பு: வெற்றி யாருக்கு ?
ஜார்க்கண்ட் தேர்தல் கருத்து கணிப்பு: வெற்றி யாருக்கு ?
Published on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. ஆட்சியை கைப்பற்ற 41 இடங்களில் வெல்ல வேண்டிய நிலையில், காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்‌ச்சா கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய தேர்தலுக்கு கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும், காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 43 இடங்களிலும், பிற கட்சிகள் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.

‌டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 28 தொகுதிகளையும், காங்கிரஸ் -‌ஜார்க்கண்ட் முக்தி மோர்‌ச்சா கூட்டணி 44 இடங்களையும், பிற கட்சிகள் 9 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்-சி வோட்டர்-‌ஏபிபி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களிலும், காங்கிரஸ் -‌ஜார்க்கண்ட் முக்தி மோர்‌ச்சா கூட்டணி 35 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com