டெல்லி காற்று மாசு: உயர்ந்தது தோல் நோய் பிரச்னைகள்
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், அம்மாநில மக்களுக்கு தோல் நோய் பிரச்னைகள் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த இரு மாதங்களாகவே காற்று மாசுவின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை போக்க டெல்லி அரசு பல கட்டுபாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக வாகனங்கள் இயக்குவதற்கு சில கட்டுபாடுகளை விதித்தது. அதேபோல டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய கழிவுகளை விவசாயிகள் எரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி பகுதியிலுள்ள மக்களுக்கு காற்று மாசுவினால் தோல் நோய் பிரச்னைகள் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மக்களில் பெரும்பாலானவர்களுக்கு தோல் பிரச்னை, தோல் கட்டிக்கள், தோல் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுடன் மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் வழக்கத்தைவிட இந்தாண்டு காற்று மாசுவினால் ஏற்பட்டுள்ள தோல் நோய் பிரச்னைகள் 30 சதவிகிதம் அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.