இதுவரை 16 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை ! இன்னும் எத்தனையோ ? கவலையில் பீகார் போலீஸ்

இதுவரை 16 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை ! இன்னும் எத்தனையோ ? கவலையில் பீகார் போலீஸ்
இதுவரை 16 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை ! இன்னும் எத்தனையோ ? கவலையில் பீகார் போலீஸ்
Published on

பீகார் மாநிலம் முசாபர்பூரில் அரசின் நிதியுதவியில் இயங்கும் தங்கும் விடுதி ஒன்றில் 44 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அந்த விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 21 பேரை முதல் கட்டமாக மருத்துவமனை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 16 பேரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து விடுதியில் மீதம் இருக்கும் சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முசாபர்பூரில் உள்ள இல்லத்தில் ஏற்கெனவே இருந்தவர்களின் விவரமும் கேட்டக்கப்பட்டுள்ளதாக இவ்வழக்கை விசாரணை செய்யும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பபமாக, ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு வளாகத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளதாக, சிறுமிகள் போலீஸாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் அரசு விடுதியின் வளாகத்தில் தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகள் எக்ஸிக்யூடிவ் மேஜிஸ்ட்ரேட் ப்ரியா ராணி குப்தா மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில் இந்தப் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் தப்பிக்க முடியாது என்று முஸாப்புர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ஹர்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதியின் சிறுமி கூறியதை அடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில அடிகள் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறியுள்ளார் ஹர்ப்ரீத் கவுர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com