“வட்டி அதிகமாக செலுத்தினாலும் சிரமம்தான்” - மத்திய வருவாய்த்துறை முன்னாள் செயலாளர்

“வட்டி அதிகமாக செலுத்தினாலும் சிரமம்தான்” - மத்திய வருவாய்த்துறை முன்னாள் செயலாளர்
“வட்டி அதிகமாக செலுத்தினாலும் சிரமம்தான்” - மத்திய வருவாய்த்துறை முன்னாள் செயலாளர்
Published on

சுயசார்பு திட்டத்தின் முதல் கட்ட அறிவிப்பு ரூ. 5, 94, 550 கோடி எனவும் 2 ஆம் கட்ட அறிவிப்புகளின் மதிப்பு ரூ. 3, 10,000 கோடி எனவும் மூன்றாம் கட்ட அறிவிப்பு ரூ. 1,50,000 கோடி எனவும் நான்காம் மற்றும் 5ஆம் கட்ட அறிவிப்பு ரூ. 48,100 கோடி எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

5ஆம் கட்ட அறிவிப்பில் மாநிலங்களுக்கான கடன் வரம்பை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய வருவாய்த்துறை முன்னாள் செயலாளர் சிவராமன், ஐஏஎஸ் கூறுகையில், “பாதிக்கு மேல் சிறு தொழிலுக்கு கடன் வாய்ப்புகள் கொடுத்துள்ளன. அது வரவேற்கப்படுபவை தான். ஆனால் சிறு தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

அவர்களுக்கு இது எவ்வாறு போதும். கண்டிப்பாக போதாது. மாநில அரசிடம் பணம் கிடையாது. அதனால் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு, 3000 வீதம் கணக்கிட்டு மாநில அரசுக்கு பணம் அனுப்பியிருக்க வேண்டும். அதை வங்கி மாநில அரசிடம் நேரடியாக கொடுக்காமல் வங்கி மூலமாகவே கொடுத்திருக்கலாம். கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களின் உணவு, இருப்பிடம் ஆகியவற்றை உரிமையாளர்கள் உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் அதை அரசு முறையாக ஒழுங்குபடுத்தவில்லை.

இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர இன்னும் 4 மாதமாவது ஆகும். 500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தினோம் என்று நிதியமைச்சர் சொல்கிறார். இது யாருக்கு பயன்படும். ஒட்டுமொத்த ஜிடிபியில் இது ஒரு சதவீதம் தான். மத்திய அரசு கொடுத்துள்ள நிதி போதாது.

மாநிலங்களுக்கான கடன் வரம்பை உயர்த்தியுள்ளது. மாநில அரசு கடன் வாங்கலாம். ஆனால் 25 லிருந்து 28 சதவீதம் வட்டியிலேயே போகிறது. வட்டி அதிகமாக செலுத்தவேண்டிய நிலை வந்தாலும் மாநில அரசுகளுக்கு சிரமம்தான்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com