மருத்துவம், பொறியியல் அனைத்திற்கும் ஒற்றை நுழைவு தேர்வு! விரைவில் நிபுணர்குழு - யுசிஜி

மருத்துவம், பொறியியல் அனைத்திற்கும் ஒற்றை நுழைவு தேர்வு! விரைவில் நிபுணர்குழு - யுசிஜி
மருத்துவம், பொறியியல் அனைத்திற்கும் ஒற்றை நுழைவு தேர்வு! விரைவில் நிபுணர்குழு - யுசிஜி
Published on

மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகளுக்கு ஒற்றை நுழைவுத்தேர்வு முறையை ஏற்படுத்து குறித்து ஆராய்வதற்கான நிபுணர் குழு இம்மாத இறுதியில் அமைக்கப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்

மருத்துவம், பொறியியல் போன்ற அனைத்து வகை உயர் கல்விகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு யுஜிசி தலைவர் பேட்டி அளித்துள்ளார். அதில் மாணவர்கள் உயர் படிப்புகளில் சேர பல்வேறு நுழைவுத்தேர்வுகள் எழுதுவது அவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

எனவே கியூட், ஜேஇஇ, நீட் ஆகிய நுழைவுத் தேர்வுகளை ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக யுஜிசி தலைவர் தெரிவித்தார். தேசிய கல்விக்கொள்கையின் நோக்கமும் இதுவே என அவர் தெரிவித்தார். எனினும் இத்திட்டத்தை நடை முறைப்படுத்துவது மிகப்பெரிய முடிவு என்றும் எனவே அவசரப்படாமல் மிகுந்த கவனத்துடன் இது செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிபுணர் குழு ஒன்று பல்வேறு வகையான நுழைவுத்தேர்வுகள் குறித்து விரிவாக அலசி ஆராய்ந்து அவற்றை ஒருங்கிணைப்பதற்கான பரிந்துரையை தரும் என்றும், இத்திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பதை இப்போதைக்கு கூற முடியாது என்றும் யுஜிசி தலைவர் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com