செவித்திறன் இழந்த தேன்குரல் நாயகி... யார் இவர்? என்ன நடந்தது? அதிர்ச்சி பின்னணி!

கேட்கக் கேட்க தெவிட்டாத பாடல்களைப் பாடி, இசையமுது படைத்த கலைஞர் ஒருவர், அரிய செவித்திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்... யார் அந்தக் கலைஞர், என்ன நடந்தது என பார்க்கலாம்...
அல்கா யாக்னிக்
அல்கா யாக்னிக்pt desk
Published on

செய்தியாளர்: ரவிக்குமார்

திரை ரசிகர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், 'ஏக்கு தோ தீன்...' என தொடங்கும் இந்திப் பாடலை கேட்டறியாதவர்கள் யாரும் இருந்திட முடியாது... 80களின் வெளியான 'Tezaab' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல், இன்றளவும் இசை ரசிகர்களின்ஃபேவரிட் ப்ளேலிஸ்ட்டில் தான் உள்ளது... இந்த மெகா ஹிட் துள்ளல் பாடலைப் பாடியவர் அல்கா யாக்னிக்

அல்கா யாக்னிக்
அல்கா யாக்னிக்pt desk

'குச் குச் ஹோத்தா ஹை' 'ஹம் ஹைன்ராஹி பியார்' 'சோளி கே பீச்சே க்யாஹே' என அடுத்தடுத்து அணிவகுக்கின்றன இவரது ஹிட்லிஸ்ட்... பாலிவுட்டில் அதிக தனிப்பாடல்களை பாடிய பாடகி என்ற புகழுக்கு சொந்தக்காரர் அல்கா யாக்னிக்... தமிழ்த் திரையிசை உலகிலும் பங்களித்துள்ளார் அல்கா யாக்னிக்...'ஓரம் போ' திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவான 'இதுஎன்ன மாயம்' பாடல் ஒலித்தது, இவரது குரலில் தான்..

அல்கா யாக்னிக்
சாகித்ய அகடாமி ‘யுவ புராஸ்கர்’ விருதை வென்ற தையல்காரர்.. தடைகளை தாண்டி சாதித்த மராத்தி எழுத்தாளர்!

58 வயதான அல்கா யாக்னிக், குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்...கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர், ஆறு வயதிலேயே ஆல் இந்தியா ரேடியோவில் பஜனைப் பாடல்களைப் பாடியவர்... இசை மீதான தீராக்காதலில், பாடகியாகவே ஆகிப் போனார் அல்கா யாக்னிக்... 25 மொழிகளில், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல், 21 ஆயிரம் பாடல்களைப் பாடி, ரசிகர்களை தேன் குரலால் மயக்கியவர் அல்கா யாக்னிக்... 2 தேசிய விருதுகள், ஏழு ஃபிலிம் ஃபேர் விருதுகள், 2 பெங்கால் ஃபிலிம் ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் விருதுகள் என, இனிய குரலைப் பாராட்டும் விருதுகள் அடுத்தடுத்து வந்து சேர்ந்தன அல்கா யாக்னிக்-கிற்கு...

அல்கா யாக்னிக்
அல்கா யாக்னிக்pt desk

2022 ஆம் ஆண்டு 15.3 பில்லியன் யூ டியூப் பார்வைகளைப் பெற்று, உலகில் அதிகம் பேரால் கேட்கப்பட்ட பாடகர் என அங்கீகரிக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைத்தவர்... தேனினும் இனிய குரல் வளத்துக்காக பல்வேறு சாதனைகளையும் சொந்தமாக்கியுள்ளார்... தாம் பாடிய பாடல்களைக் கேட்டு சிலாகித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, அதிர்ச்சியூட்டும் ஸ்டேட்மென்ட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அல்கா யாக்னிக்... அந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பதறி போய் இருக்கிறார்கள்...

வைரஸ் தாக்குதலால் செவிகளில் அரிதான உணர் திறன் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார் அல்கா... ஹெட் ஃபோன்களில் மிக சத்தமாக இசையை கேட்பதைத தவிர்த்து எச்சரிக்கையாக இருக்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்...உங்கள் அனைவரின் அன்புடன் மீண்டு வருவேன் என்றும் அல்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்...

இசைமழையால் செவிகளைக் குளிரவைத்த, தேன்குரல் நாயகியின் செவித்திறன் பிரச்னை குறித்து, காது மூக்கு தொண்டை சிறப்பு ஹரி மெய்யப்பனிடம் கேட்டோம்... (வீடியோ தொகுப்பில் காணவும்)

60 விழுக்காடு அளவு ஒலி, 60 நிமிட கால அளவு என்ற '60 : 60' விதியை சமரசமின்றி பின்பற்றுவதே செவித்திறனை பாதுகாக்க ஒரே வழி என்றார். இதுவே காது - மூக்கு - தொண்டை சிறப்பு மருத்துவர்களின் அறிவுரை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com