எல்லையில் தங்கிய கட்டாய விருந்தினர்கள்.. மூன்று மாதங்களாக தவித்த சிக்கிம் குடும்பம்

எல்லையில் தங்கிய கட்டாய விருந்தினர்கள்.. மூன்று மாதங்களாக தவித்த சிக்கிம் குடும்பம்
எல்லையில் தங்கிய கட்டாய விருந்தினர்கள்.. மூன்று மாதங்களாக தவித்த சிக்கிம் குடும்பம்
Published on

சிக்கிம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ரம்டக் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு மாநிலத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மேங்குவங்கத்தில் இருந்து சிக்கிம் செல்வதற்கான தங்களுடைய குடியுரிமையை நிரூபிக்கும் அடையாள அட்டையை அவர்களால் காட்டமுடியவில்லை.

மூன்று மாதப் போராட்டத்திற்குப் பிறகு, இந்த வாரம்தான் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். அனில் சுபா, அவரது மனைவி சங்கீதா, மகள் சுஷ்மிதா, மகன் அஜய் ஆகியோர் நேபாளத்தில் இருந்து திரும்பியவர்கள். ஜூன் 2 ஆம் தேதியன்று சிக்கிம் மாநிலத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார்கள்.

பின்னர் அவர்கள் சமூக வலைதளத்தில் தங்களுடைய பிரச்னையைப் பற்றி பேசி உதவி கேட்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்கள். இதுபற்றி சிக்கிம் உயர்நீதிமன்றத்திலும் பலமுறை புகார்கள் தெரிவித்தனர். ஆனாலும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எல்லையிலேயே தங்க நேர்ந்துவிட்டது.

சொந்த காரணங்களுக்காக நேபாளம் சென்றவர்கள், இரு நாடுகளிலும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஊருக்குத் திரும்பமுடியவில்லை. ஜூன் மாதம் எல்லைப்பகுதியான ராங்க்போ சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர. பின்னர் சிக்கிம் காவல்துறை அதிகாரி உதவியால் எல்லையில் உள்ள ஒரு வீட்டில் கட்டாய விருந்தினராக மூன்று மாதங்கள் தங்கியிருந்தனர்.

"ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சொந்த ஊர் திரும்பியதில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சொந்த வீட்டிற்குச் செல்வதற்காக ஒருவர் இத்தனை தடவை முறையிடவேண்டுமா என்பது கற்பனையில்கூட நினைக்கமுடியாதது. இதுவொரு வலிமிகுந்த பயணம். ஆனால் பாடமும்கூட. இனிமேல் என் ஆவணங்களை முறையாக பராமரிக்கவேண்டும் என நினைக்கிறேன்" என்கிறார் சுஷ்மிதா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com