இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், 'கோவிஷீல்டு' தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்குவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்குகிறது. இதன்மூலம் அடுத்த 90 நாட்களில் 6-7 மில்லியன் டோஸ்கள் கிடைக்கும். Covovax தடுப்பூசியின் ஆறு மில்லியன் பூஸ்டர் டோஸ்கள் இருப்பில் உள்ளன. இளம் வயதுடையவர்கள் முகக்கவசம் அணிவதோடு, பூஸ்டர் ஷாட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றுள்ளார்.
சமீபத்திய தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது கொரோனாவில் ஓமைக்ரான் திரிபுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையே அதிகளவில் இருக்கிறது.
அதிகரிக்கும் இந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடுத்த 10 -12 நாட்களுக்கு அதிகரித்து, அதன் பிறகு குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. அப்படியான நிலையில்தான் சீரம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.