வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் அதன் பிரைவசி பாலிசியில் மேற்கொண்டு வந்த மாற்றங்கள் இணையதளத்தில் ரணகளத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பயனர்களின் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர முற்படுவது தான் இதற்கு காரணம்.
இந்நிலையில் ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோரில் டாப் ஃப்ரீ அப்ளிகேஷன் பட்டியலில் சிக்னல் மெசேஞ்சர் அப்ளிகேஷன் வாட்ஸ் அப்பை முந்தியுள்ளது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இப்போதைக்கு சிக்னல் தான் ஃப்ரீ அப்ளிகேஷன் பட்டியலில் உள்ளது. இரண்டாவது இடத்தில் டெலிகிராம் அப்ளிகேஷன் உள்ளது. வாட்ஸ் அப் மூன்றாவது இடத்தில் உள்ளது.
வாட்ஸ் அப்பை விட சிக்னல் அப்ளிகேஷனில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருப்பது தான் பெரும்பாலான பயனர்கள் சிக்னல் செயலியை நாட காரணம். கடந்த சில நாட்களாவே சிக்னல் அதிகளவிலான பயனர்களை பெற்று வருவதாகவும் தெரிகிறது.