கர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவரை தொடர்ந்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் 12 இடங்களை கைப்பற்றி பாஜக அபார வெற்றி பெற்றது. 2 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 6 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் அங்கு எடியூரப்பா அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை இருந்தது. அதன்படி 12 இடங்களில் வெற்றி பெற்று பாஜக அரசை கர்நாடகாவில் தக்க வைத்துக்கொண்டது.
இந்நிலையில், கர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவரை தொடர்ந்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.