முன்னாள் முதலமைச்சர் சித்தாரமய்யா கருத்தால் கர்நாடக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில், பாரதிய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார். அவர்களது பெயர்களை தற்போது வெளியிடப் போவதில்லை எனக்கூறியிருக்கும் சித்தராமய்யா, காங்கிரஸில் சேர அவர்களுக்கு தங்கள் கட்சியின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைமையை ஏற்று தங்களுடன் சேர வேண்டும் என்றும், கட்சியில் சேர எந்த நிபந்தனையும் விதிக்கக்கூடாது எனவும் சித்தராமய்யா கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல், பாரதிய ஜனதா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் பலர் காங்கிரஸில் சேர விரும்புவதாகவும், இவ்விசயத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சலீம் அகமது தெரிவித்துள்ளார்.