புயலைக் கிளப்பிய இந்தி மொழி விவகாரம்- கர்நாடக முன்னாள் முதல்வர்கள் கருத்து

புயலைக் கிளப்பிய இந்தி மொழி விவகாரம்- கர்நாடக முன்னாள் முதல்வர்கள் கருத்து
புயலைக் கிளப்பிய இந்தி மொழி விவகாரம்- கர்நாடக முன்னாள் முதல்வர்கள் கருத்து
Published on

இந்தி தேசிய மொழி அல்ல என கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையாவும், குமாரசாமியும் கூறியுள்ளனர்.

இந்தி தேசிய மொழியா என்பது குறித்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் சுதீப் இடையே ட்விட்டரில் நடைபெற்ற வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் இந்தி ஒருபோதும் தேசிய மொழி அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பன்மொழித் தன்மையை ஒவ்வொரு குடிமகனும் மதிக்கவேணடும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வரலாறு உள்ளது என்றும், ஒவ்வொருவரும் தமது மொழி குறித்து பெருமிதப்பட பல விஷயங்கள் உள்ளன என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்தி தேசிய மொழி அல்ல என்ற நடிகர் சுதீப்பின் கருத்தை, தானும் ஆதரிப்பதாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் பேர் பேசுவதால் மட்டும் இந்தி தேசிய மொழி ஆகிவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாநில மொழிகளை சிதைக்கும் பணியை காங்கிரஸ் தொடங்கிவைத்ததாகவும், அதை பாரதிய ஜனதா விரிவுப்படுத்தி வருவதாகவும் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com