இந்தி திணிப்பை பொறுத்துக் கொள்ள முடியாது: சித்தராமையா

இந்தி திணிப்பை பொறுத்துக் கொள்ள முடியாது: சித்தராமையா
இந்தி திணிப்பை பொறுத்துக் கொள்ள முடியாது: சித்தராமையா
Published on

இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. அப்படித் திணித்தால் கட்டாயம் எதிர்த்துப் போராடுவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “இந்தி மொழியை திணிப்பதை கர்நாடக அரசு ஒருபோது பொறுத்துக் கொள்ளாது. மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே பெங்களூரு மெட்ரோ ரயில்களில் இந்தி பயன்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றும் மத்திய அரசின் திட்டம் அல்ல. அத்திட்டத்திற்கு பெரும்பங்கு தொகை மாநில அரசின் நிதியில் இருந்து செலவிடப்பட்டுள்ளது. இந்தி வட இந்தியாவின் சில மாநிலங்களில் பேசப்படுகிறது. அதற்காக இந்தி நாடு முழுவதும் பேசப்படுகிறது என்று பார்க்கக் கூடாது” என்றார்.

மேலும், இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி. எனவே நாட்டில் உள்ள அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெங்கையா நாயுடுவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபோன்ற கருத்துக்களை ஒதுபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசை எதிர்த்து போராடுவோம் என்றும், மாநில மொழியான கன்னடத்தை பாதுகாப்போம் என்றும் சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com