உத்தவ் தாக்கரே கருத்தினை விமர்சித்த நபர் மீது பெண் தொண்டர் ‘மை வீச்சு’

உத்தவ் தாக்கரே கருத்தினை விமர்சித்த நபர் மீது பெண் தொண்டர் ‘மை வீச்சு’
உத்தவ் தாக்கரே கருத்தினை விமர்சித்த நபர் மீது பெண் தொண்டர் ‘மை வீச்சு’
Published on

மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக விமர்சனம் செய்த நபர் மீது, சிவசேனா பெண் தொண்டர் ஒருவர் மை ஊற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15ம் தேதி டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது. மாணவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்துவது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தான் நாடு முழுக்க போராட்டம் பரவ முக்கிய காரணமாக அமைந்தது. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, ஜாமிய பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டமும், அதனை தொடர்ந்த வன்முறையும் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்துவதாக இருக்கிறது என மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்திருந்தார். அந்த நிலையில், உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்த நபர் ஒருவர் மீது சிவசேனா பெண் தொண்டர் மை ஊற்றினார்.

ஆனால், அந்த நபரோ எதையும் கவனிக்காமல் செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பாக உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த நபர் மீது தாக்குதல் நடத்திய சிவசேனா தொண்டர்கள், அந்த நபரின் தலையையும் மொட்டை அடித்தனர். இதனிடையே, சிவசேனா தொண்டர்கள் அமைதியான வழியில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்று அவரது மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com