இந்தியா
"நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல; நாங்கள் இந்திய குடும்பம்" - உத்தவ் தாக்கரே
"நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல, நாங்கள் இந்திய குடும்பம்" என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கனவே இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் நடந்த நிலையில் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதனை அடுத்து இண்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சிவசேனா (UBT) கட்சியின் தலைவரும் மகராஷ்டிர மாநில முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார். முழு காணொளியும் செய்தியில் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.